பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 12 மடங்கு உயர்ந்த சீன முதலீடு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
India, China, FDI, Ivestment, Global Data, இந்தியா, சீனா, முதலீடு, உயர்வு, குளோபல் டேட்டா

புதுடில்லி: இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்களின் முதலீடு, கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, சீனாவை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீனா மீதான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் பலதரப்பில் இருந்து குரல் எழுந்தன. இதனையடுத்து, சில சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.


latest tamil news


இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடுகள் 12 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குளோபல் டேட்டா நிறுவனம், சர்வதேச தொழில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் திரட்டியுள்ள தகவல்களின்படி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 2016ல் 38.1 கோடி டாலராக மட்டுமே இருந்த சீன முதலீடு 2019ம் ஆண்டில் 460 கோடி டாலராக உயர்ந்துள்ளது.


latest tamil news


இந்தியாவிலுள்ள 24 முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீனாவைச் சேர்ந்த பெருநிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, அலிபாபா, டென்செண்ட் ஆகிய நிறுவனங்களே இந்திய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அலிபாபா நிறுவனமானது பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமாட்டோ ஆகிய நான்கு நிறுவனங்களில் மட்டும் 260 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. அதேபோல், டென்செண்ட் நிறுவனமானது ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம்11, பைஜூஸ் ஆகிய 5 நிறுவனங்களில் 240 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், டிடி சுஷிங், மெய்துவான் டியன்பிங், போசன், ஷுன்வே கேபிடல், ஹுல்ஹவுஸ் கேபிடல் குரூப், சீனா லாட்ஜிங் குரூப் ஆகிய சீன முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பல கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Subbarao - Chennai,இந்தியா
30-ஜூன்-202020:14:44 IST Report Abuse
Venkat Subbarao உலக வரை படத்தில் சீனாவும் பாக்கிஸ்தானும் இருக்கக் கூடாது
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
27-ஜூன்-202019:02:08 IST Report Abuse
Rajas செப்டம்பர் 2014 ல் Make India திட்டம் என்றார்கள். ஆனால் கணக்கு படி பார்த்தால் இந்த ஸ்லோகன் சொன்னபிறகு அதிக சீன கம்பனிகள் வந்திருக்கின்றன. எப்படி இவ்வளவு சீன நிறுவனங்கள் இங்கே வந்தன. இது பற்றி நிதி அமைச்சகம் மற்றும் நிறுவனங்களின் அமைச்சகம் என்ன பதில் சொல்வார்கள். அதே நேரத்தில் சிறு குறு கம்பனிகளின் அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் இந்திய கம்பனிகளின் வீழ்ச்சி பற்றி என்ன சொல்ல போகிறார்கள்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
27-ஜூன்-202017:19:01 IST Report Abuse
நிலா இந்தியாவில் சீனா முதலீடுகள் எவை எவை என்று பகிரங்கமாக பட்டியல் இடுங்கள் மத்திய அரசு இறக்குமதி செய்தாலும் மக்களாகிய நாங்கள் அதை வாங்கி உபயோகிப்பதை நிறுத்திக்கொள்கிறோம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
28-ஜூன்-202007:02:52 IST Report Abuse
தல புராணம்இறக்குமதியில் 90% அம்பானி வாங்கும் மொபைல்போன் பாகங்கள், மின்திட்ட உபகரணங்களும், அதானி வாங்கும் சோலார் மின்திட்ட நட்டுபோல்ட்டு முதற்கொண்டு மின்தகடுகள், SCADA சாதனங்களும். அவைகளை நீ எல்லாம் வாங்கமுடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X