பொது செய்தி

தமிழ்நாடு

1,250 பேருக்கு பரிசோதனை அமைச்சர் உதயகுமார் பேச்சு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுரை: ''தினமும் 1,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது,'' என, மதுரையில் அரசு அலுவலகங்களுக்கு 600 கை சுத்திகரிப்பான் இயந்திரங்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கலெக்டர் வினய் முன்னிலை வகித்தார். அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் செயலாளர் பிரியதர்ஷினி, இயக்குனர் தனலட்சுமி இயந்திரங்களை கண்காணிப்பு அலுவலரிடம் வழங்கினர்.அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: வெளிநாடு, மாநிலம், மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்குள் 37 ஆயிரம் பேர் வந்துள்ளனர். 35லட்சம் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வீடுவீடாக காய்ச்சல் இருக்கிறதா என அலுவலர்கள் குழு பரிசோதனை செய்து வருகிறது. ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்து மருத்துவ சிகிச்சையளிக்க மைக்ரோ லெவல் அப்சர்வேஷன் ஸ்கீம் முறையில் கண்காணிப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர், என்றார்.மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஓ.,செல்வராஜ், சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X