தமிழ்நாடு

மாநகராட்சியில் நகர் நல அலுவலர் பணியிடம் காலி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுரை: கொரோனா தாண்டவமாடும் மதுரை மாநகராட்சியில் சி.எச்.ஓ., (நகர்நல அலுவலர்) பணியிடம் காலியாக இருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தொற்று தடுப்பு பணியிலும் சிக்கல் நிலவுகிறது.

இங்குள்ள 100 வார்டுகளில் 85ல் கொரோனா பாதிப்புள்ளது. இறப்பும் அதிகம். கொரோனாவை கட்டுப்படுத்த நிர்வாகம் பலநடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால் தொற்று தடுப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்பு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் வீதம் பணியில் இருந்தனர். புதிய விதிமுறையால் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 100 வார்டில் 27 பேர் மட்டும் உள்ளனர். கொரோனா காலத்தில் மொத்த வார்டுகளையும் இவர்களால் கவனிக்க முடியவில்லை. மேலும் மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் முதன்மை பணியிடமான நகர்நல அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது.

உதவி அலுவலர் வினோத்ராஜா கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.சென்னைக்கு உதவ 18 நகராட்சிகளில் இருந்து நகர்நல அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மதுரைக்கோ ஒதுக்கப்பட்ட பணியிடமே ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X