பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2,500 படுக்கை வசதிகளுடன் 21 கல்வி நிறுவனங்கள் தயார்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுரை: மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2500 படுக்கை வசதிகளுடன் 21 கல்வி நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன.மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா சிறப்பு மருத்துவமனை, மதுரை அரசு மற்றும் தோப்பூர் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக கூடுதலாக 2500 படுக்கைகளுடன்கூடிய 21 கல்வி நிறுவனங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இங்கு மிதமான அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 50 படுக்கை வசதிகளுடன் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு அடிப்படை வசதிகளை கொரோனா கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், கலெக்டர் வினய் ஆய்வு செய்தனர். கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஓ.,க்கள் செல்வராஜ், கண்ணன், மேலுார் ஆர்.டி.ஓ., கண்ணகி, திருப்பரங்குன்றம் பி.டி.ஓ., ஆசிக் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X