பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியருக்கு கொரோனா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டது.வடக்கு வெளி வீதியில் உள்ள இந்த அலுவலகத்தில் 85 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். குலமங்கலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் செக் ஷன் அசிஸ்ட்டென்ட்டாக உள்ளார். விளாங்குடி கிளையில் கேஷியராக இருந்த இவர், ஒரு வாரத்திற்கு முன் மாறுதலில் வந்தார்.இரு நாட்களுக்கு முன் இவருக்கு பரிசோதனை நடந்தது.நேற்று தொற்று உறுதியானது. இதனால் 'அலுவலகத்தை மூடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்' என மற்ற ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.ஊழியர்கள் கூறியதாவது: தொற்று உறுதியானதும் அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தை விட்டு சென்றனர். ஊழியர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X