பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 ஜூன் 29 முதல் நேரில் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement


மதுரை: மதுரையில் கலெக்டர் வினய் கூறியதாவது: கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு பல்வேறு நிவாரணங்களை அரசு வழங்குகிறது. ஜூன் ௩ வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. நிவாரணம் 46,627 பேருக்கு வழங்க ரூ.4,66,27,000 பெறப்பட்டுள்ளது. அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை காண்பித்து மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் பெறலாம். நிவாரணத்தை இரண்டு ரூ.500 நோட்டுகளாக வழங்க வேண்டும். ஜூன் 29 முதல் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று நேரில் நிவாரணத்தொகை வழங்கப்படும். நிவாரணம் பெறுவதில் சிரமம் இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தை 0452-252 9695 ல் தொடர்பு கொள்ளலாம். நிவாரணம் பெறாதவர்கள் 1800 452 50111ல் தொடர்பு கொள்ளலாம். அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X