பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: சாத்தான்குளத்தில், வணிகர்கள் இறந்த சம்பவத்தை கண்டித்து, ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் தாக்கி இறந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வணிகர்களின் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் நீதித்துறை, போலீஸ், சிறைத்துறையினர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளத்துக்கு அருகே, பல சிறைகள் உள்ள நிலையில், கோவில்பட்டி சிறையில் அனுமதித்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். தாலுகா செயலாளர் நாச்சிமுத்து, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட குழு பிரதிநிதி கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.* அந்தியூரில், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில், சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தியும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


* மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகா அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தாலுகா கமிட்டி உறுப்பினர் கனகவேல், உறுப்பினர் சசி, சண்முகவள்ளி, மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி உறுப்பினர் தங்கவேல், விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X