பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கு வந்து மாற்றுத்திறனாளிக்கு நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா வைரஸ் பரவல் கால நிவாரணத்தொகை, 1,000 ரூபாய் அவர்களது வீடுகளில் வழங்கப்படும் என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கமாக, அவர்கள் வீட்டில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டையை காண்பித்து, அதன் நகலை நிவாரண தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து, தொகை பெறலாம். வினியோக படிவம் பூர்த்தி செய்ய தேவையான விபரங்களை, தெரிவிக்க வேண்டும். தனி நபர் விபரம், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, யூ.டி.ஐ.டி., விண்ணப்ப நிலை ஆகிய விபரங்களை தெரிவிக்க வேண்டும். இத்தொகை இன்று (27) முதல் ஜூலை, 3 வரை பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இதில் சிரமம் இருந்தால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் - 94438 46297, உதவி கிடைக்கவில்லை எனில் மாநில மையம் எண்: 18004250111, வாட்ஸ் ஆப் மற்றும் வீடியோ கால் எண்: 9700799993 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இத்தொகை மாற்றுத்திறனாளிகள், அவரது பெற்றோர், பாதுகாவலரிடம் மட்டும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X