பொது செய்தி

தமிழ்நாடு

சோதனைச்சாவடியில் தொழிலாளர்கள் அவதி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: வேலைக்காக வந்த தொழிலாளர்கள், கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் கடும் அவதிப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்ட எல்லைக்குள் வாகனங்கள் நுழைய வரும், 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே, அனுமதிக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்ட எல்லையான, கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ஈடுபட்டு, வெளி மாவட்ட வாகனங்களை திருப்பி அனுப்பினர். இ- பாஸ் பெற்று வரும் வாகனங்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர், செவிலியர், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் அடையாள அட்டையை காண்பித்த பின் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தனியார் நிறுவன பணியாளர்கள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், அடையாள அட்டை இல்லாத பணியாளர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பலர், அப்பகுதி காவிரி பாலத்தின் அருகில், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்தே வேலைக்கு வந்தனர். பஸ் போக்குவரத்து இல்லாததால், நாமக்கல் மாவட்டம் வெப்படை, ஆவத்திபாளையம், மண்டபத்தூர், தார்க்காடு, எஸ்.பி.பி., காலனி போன்ற பகுதிகளிலிருந்து கட்டட தொழிலாளர்கள், விசைத்தறி கூலிகள் அங்கிருந்து, நடந்தே வந்தனர். சாலைகள் முழுவதும் 2 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X