பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவர்களுக்கு அனுமதியில்லை: கோபி நகராட்சி எச்சரிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கோபி: கோபி நகராட்சி அலுவலக வளாகத்துக்குள், சிறுவர்கள் நுழைய அனுமதி இல்லை என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
கோபி-சத்தி சாலையில், கச்சேரி மேட்டில், கோபி நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போதைய கொரோனா சூழலில், கோரிக்கை எனக்கூறி தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால், தொற்று ஏற்படும் எனக்கருதி, நகராட்சி நிர்வாகம் நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து அறிவுரைகள் அடங்கிய அறிவிப்பு, கோபி நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'நகராட்சி அலுவலக வளாகத்துக்குள், சிறுவர்கள் நுழைய அனுமதி கிடையாது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு, கை கழுவிய பின்பே, நகராட்சிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். கோரிக்கைகளுக்கு, குறைந்தபட்சம் இருவருக்கு மட்டுமே அனுமதி. சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கமிஷனரின் எச்சரிக்கை அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X