கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு

Added : ஜூன் 27, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: மாவட்ட, மாநில எல்லை சோதனைச்சாவடிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். இ-பாஸ் இன்றி பிற மாநிலம், பிற மாவட்டத்தினரை அனுமதிக்க வேண்டாம். வாகனங்களில் உரிய அனுமதியுடன், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில், 90 முதல், 100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வீதம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேவையான அளவு படுக்கை வசதி, அடிப்படை வசதி உள்ளதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் காசநோய் பாதித்தோரை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். வரும் ஞாயிறு முதல் மீன் கடைகள் இயங்காது. வாரத்தின் இதர நாட்களில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யாமல், முழு மீனாக மட்டும் விற்கலாம். கோழி, ஆடு உள்ளிட்ட இதர இறைச்சி கடைகள், அனைத்து நாட்களிலும் இயங்கும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., சக்திகணேசன், டி.ஆர்.ஓ., கவிதா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X