பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் குமரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, வருவாய் துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்களுக்கு அரசு அறிவித்தபடி, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கும், அரசு சார்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். துணை ஆட்சியர் நிலையில் பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றையும், பிற காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும், அரசு சார்பில் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X