பொது செய்தி

தமிழ்நாடு

13 பகுதிகளில் வெளியாட்களுக்கு தடை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியில், 13 இடங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகரில், கடந்த மார்ச்சில், கொரோனா தொற்று தொடங்கியது. 100 இடங்கள் வரை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தினமும் ஐந்து வேளை கிருமிநாசினி தெளித்தல், வெளியாட்கள் நுழைய, கடைகள் திறக்க தடை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு, தொற்று பரவல் தடுக்கப்பட்டது. ஜூனில் ஊரடங்கில் தளர்வால், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்தினர், அனுமதியின்றி சேலத்துக்குள் நுழைந்ததால், மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது. இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படாமல், கிருமிநாசினி மட்டும் தெளிக்கப்பட்டது. தற்போது, சேலத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இதை தடுக்க, மீண்டும் அந்தந்த பகுதிகளை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, சேலம், சூரமங்கலம் மண்டலத்தில் ஜாகீர் அம்மாபாளையம் அருகே வீரபாண்டி நகர், பள்ளப்பட்டி ராவனேஸ்வரா நகர்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் பிரகாசம் நகர், குமாரசாமிப்பட்டி கிழக்கு தெரு, செவ்வாய்ப்பேட்டை வைத்தி தெரு, மணக்காடு இட்டேரி சாலை; அம்மாபேட்டை மண்டலத்தில், அரசமரம் பிள்ளையார் கோவில் தெரு, எல்லீஸ் நகர், தில்லை நகர்; கொண்டலாம்பட்டி மண்டலத்தில், தாதகாப்பட்டியில் உள்ள ஜவகர் நகர், நெசவாளர் காலனி, என்.எஸ்.கே., படிப்பகம், சீரங்கம் புதுத்தெரு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு வெளிநபர்கள் நுழைய தடை விதித்து, வாகனங்கள் செல்லாதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடு, மேலும் பல பகுதிகளில் அமல்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X