பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் வந்த பெண் எஸ்ஐ, கோவை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு கொரோனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
திருப்பூர், வடக்கு போலீஸ் ஸ்டேசன், கொரோனா, பெண் சப் இன்ஸ்பெக்டர்,  பெண் எஸ்.ஐ., Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, Tirupur North Police Station, si


திருப்பூர்: சென்னையில் இருந்து விடுமுறையில் திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது.


latest tamil news



சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் எஸ்.ஐ கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வந்திருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தற்போது மூடப்பட்டது. போலீஸ் குடியிருப்பு, போலீஸ் கேண்டீன், பகுதி சீல் வைக்கப்பட்டது.


latest tamil news




கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும், ஸ்டேஷன் போலீசார், குடியிருப்பில் உள்ளோருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர்.


latest tamil news





பெண் ஊழியருக்கு கொரோனா



கோவை எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அமைச்சு பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சமீபத்தில், அவர் பழனி சென்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.அதில், அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, எஸ்.பி., அலுவலகத்தில் அவர் பணியாற்றிய 2வது தளம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணி நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X