பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது: 15,685 பேர் பலி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
India, CoronaVirus, DeathToll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து 881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 384 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news




மாநில வாரியா பாதிப்பு விவரம்


பாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 52 ஆயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 106 பேர் மரணமடைந்துள்ளனர்.
டில்லியில் 77 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 492 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 74 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 957 பேர் மரணமடைந்துள்ளனர்.
குஜராத்தில் 30 ஆயிரத்து 095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 771 பேர் மரணமடைந்துள்ளனர்.
உ.பி.,யில் 20 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 630 பேர் மரணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 380 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 16 ஆயிரத்து, 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 616 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் 12 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 211 பேர் மரணமடைந்துள்ளனர்.
ம.பி.,யில் 12 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 546 பேர் மரணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 12 ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 237 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் 11 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் மரணமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் 11 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 180 பேர் மரணமடைந்துள்ளனர்.
பீஹாரில் 8 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் மரணமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் 6 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 பேர் மரணமடைந்துள்ளனர்.
அசாமில் 6 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒடிஷாவில் 6 ஆயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
பஞ்சாபில் 4 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் மரணமடைந்துள்ளனர்.
கேரளாவில் 3 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.
உத்தர்கண்டில் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் மரணமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் 2 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜார்கண்டில் 2 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர்.
திரிபுராவில் ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பேர் மரணமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணமடையவில்லை.
கோவாவில் ஆயிரத்து 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202021:58:04 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன் என்னவோ அர்த்தசாஸ்திரிகள் சொன்னார்கள் சூரிய கிரகணத்திற்கு பிறகு குறையும் என்று இப்போ தான் பெட்ரோல் விலை காலையில் கேட்டல் உச்சம் மாலியில் KORRANAA பற்றி சொல்லும்போது உச்சம் கடவுளே இனி மிச்ச நாட்கள் எப்படியோ
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-202016:40:33 IST Report Abuse
மலரின் மகள் தொடர்ந்து பயமுறுத்தி கொண்டே இருக்கிறார்களே? நம்பிக்கை ஊட்டவேணாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X