நிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு?: சிதம்பரம் கேள்வி

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement
Chidambaram, Rajiv gandhi Foundation, China, Congress, bjp, pm, pm modi, சிதம்பரம், ராஜிவ் அறக்கட்டளை, நிவாரணம், சீனா, ஆக்கிரமிப்பு, கேள்வி

புதுடில்லி: ராஜிவ் அறக்கட்டளை தொடர்பாக பாஜ., குற்றம் சாட்டி வரும் நிலையில், 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு என முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி, சீனா உடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாகவும் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டினார். மேலும், காங்., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது எனவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.


latest tamil news


இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்., எம்.பி.,யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்பிக்கப்பட்டது.
இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜ., முடிச்சு போடுகிறது! சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvan - Rishikesh,இந்தியா
27-ஜூன்-202020:25:07 IST Report Abuse
Duruvan இதோ சோக்ஷி மற்றும் நிரவ் மோடி போன்ற வங்கி கொள்ளயர்கள் RG foundation க்கு பணம் கொடுத்தது வந்து உள்ளது. இவனுடைய பணம் இப்போது சீன வங்கியில் உள்ளது swiss bank ல் இல்லை. சீன ஆக்கிரமிப்பு சோனியாவின் தூண்டுதல்.
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
27-ஜூன்-202020:22:57 IST Report Abuse
 Madhu இந்தப் பொருளாதார வல்லுனர், முன்னாள் நிதியமைச்சர் 2.3 நாட்கள் முன்பு ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, நாம் சீனப் பொருட்களை பகிஷ்பரிப்பது தவறு உலகளாவிய வர்த்தகத்திற்கு எதிரானது என்பது போலக் கருத்து தெரிவித்திருந்தது நினைவுக்கு வருகிறது. தற்போது ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடமிருந்து பணம் பெறப்பட்டதும், பிரதம மந்திரி நிவாரண நிதியிலிருந்து பணம் குழாய் வழியே செல்வது போல் செலுத்தப்பட்டதும் டிவி செய்திகளில் வந்து வெட்ட வெளிச்சமாகி விட்டது. எனவே, இவரது கருத்துக்கும், சீனாவிடமிருந்து ராஜிவ் அறக்கட்டளைக்கு பெறப்பட்ட பணத்திற்கும் சம்பந்தம் இருப்பதை இவர் முன்னமேயே உறுதி செய்து விட்டார் என்பதை நம்பலாம். ராஜிவ் காந்தி பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதில் பிரதம மந்திரி நிவாரண நிதியிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனையை யார் தந்தார்கள்? சீனாவா, சோனியாவா, வாத்ராவா, பிரியங்காவா, ராகுலா, ப.சி. அவர்களா அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களா என்பதற்குத்தான் இவர் இனி விளக்கம் அளிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Duruvan - Rishikesh,இந்தியா
27-ஜூன்-202020:20:14 IST Report Abuse
Duruvan பேரிடர் உதவியை அரசாங்கம் செய்யும் ஆண்டோனியா மைனா அல்ல அனைத்து அரசுடைமை நிறுவனங்களிடம் இருந்து மக்களின் வரி பணத்தை வாங்க RG அறகட்டளைக்கு என்ன அவசியம் காங்கிரஸ்யை brand செய்யவா? பிரதமர் நிர்வாகிக்கும் நிதியில் இருந்து பிரதமரும் சிதம்பரமும் trustee ஆக இருக்கும் வேறு ஒரு நிறுவனத்திற்கு பிரதமர் கொடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளான். வந்த பணத்திற்கு எப்படி திருட்டு கணக்கு எழுதுவது என தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X