பொது செய்தி

தமிழ்நாடு

ராயபுரத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, கொரோனா, மண்டலவாரியாக, பாதிப்பு, ராயபுரம், விதிமீறல், அபராதம்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், நேற்றுடன் (ஜூன் 26), 49 ஆயிரத்து, 690 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில், 28 ஆயிரத்து, 823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்து, 136 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 730 பேர் பலியாகியுள்ளனர்.


சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு


மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில், 7,211 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 5,989 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,655 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




22 பேர் பலி


சென்னையில் இன்று (ஜூன் 27) ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 6 பேரும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.


அபராதம்


தமிழகத்தில் பொதுமுடக்க விதி மீறல் தொடர்பாக ரூ.15.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறிய 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 6,82,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
27-ஜூன்-202021:45:21 IST Report Abuse
ocean kadappa india லாக்டவுன்காலத்தில் வெட்டவெளியில் குரோனா தொற்றுவதற்கு ஆட்களை தேடி சுற்றி திரிகிறது.. அல்லது எங்காவது லாக்டவுன் முடியும் வரை பதுங்கி இருக்கும். அதன் வாழ் நாள் எவ்வளவு என தெரிய வில்லை. சென்ற டிசம்பரில் இருந்து இன்று வரை ஏழு மாதங்களாக குரோனா வீரியம் படிப்படியாக குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறைய வில்லை. வைராலஜி நிபுணர்கள் எவராவது குரோனா வைரஸ்களை பிடித்து பாட்டிலில் அடைத்து அதனை முழுமையாக ஆராய வேண்டும்.. மனிதர்களை தொற்று முன் வெட்ட வெளியில் பரவியுள்ள குரோனா வைரஸ் கிருமியை அதற்கு வேண்டிய புரோட்டீனால் ஈர்க்க முடியும். புரோட்டீன் தேவைக்குதான் மனிதர்களை தொற்றுகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் இறப்புடன் தொற்றாதவர்களையும் சேர்த்துது ஊரடங்கு போடுவதை தடுக்க முடியாது. சீனர் எப்படி வைராலஜி ஆய்வு கூடத்திலிருந்து குரோனாவை கண்டு பிடித்து அதை வெளியில் பரப்பினார்கள். அதே போல் நாமும் ஏகாந்த வெளியில் பரவியுள்ள குரோனா வைரஸ் கிருமிகளை ஈர்ப்பு விசையில் மடக்கி முழுமையாக அழிக்க முடியும். குரோனாவை ஈர்க்கும் வகையில் புரத சத்துள்ள பொருட்களை ஓரிடத்தில் குவித்து வைத்து கண்காணித்தால் அதன் மேல் ஏராளமான குரோனா வைரஸ் கிருமிகள் தொற்றி இருப்பதை அறியலாம். அப்படியே அவைகளை தொற்றியுள்ள புரத பொருளுடன் சேர்த்து பாட்டில்களில் அடைத்து அதன் வீரியத்தையும் வாழ் நாளையும் ஆராயமுடியும். ஒரு மனிதன் செய்யும் அக்கிரமத்தை இன்னொரு மனிதனால் அழிக்க முடியாதா என்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X