பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் மரண பயம் வேண்டாம்: சுகாதார செயலர்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா, மரணபயம், சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், சென்னை, பரிசோதை, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, Radhakrishnan, Health Secretary,

சென்னை: கொரோனா ஏற்பட்டவுடன் மரணம் நிகழும் என பொது மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில் நடக்கும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கண்டு அஞ்ச வேண்டாம். கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு இல்லாததால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டால், மரணம் நிகழும் என அச்சப்படக்கூடாது. இதுவுரை 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.


latest tamil news



தற்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது. 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது.கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
27-ஜூன்-202016:26:56 IST Report Abuse
Baskar நீங்கள் செய்யும் முறைகள் எங்களுக்கு மக்களுக்கு புரிகிறது. ஆனால் இந்த ஸ்டாலினுக்கு புரியவில்லையே . எல்லாம் வல்ல இறைவன் பார்த்து கொள்வான்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-ஜூன்-202015:10:32 IST Report Abuse
Siva நீங்க பேசுவது நல்லாத்தான் இருக்கு அதிகாரியே.... ஆனால் மரண பயம் வேண்டும்... அப்போது தான் சுத்தம் சுகாதாரம் மற்றும் அடுத்தவர் மீது தொல்லை தராத வாழ்வு என்பது என்ன என்று தெரியும்... ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை என்ன என்று தெரியும்.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்......
Rate this:
Cancel
27-ஜூன்-202013:38:15 IST Report Abuse
Jayamurthy chandra mohan good speech, he is best.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X