பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மாவட்டங்களில் இன்றும் உயர்ந்த கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
தமிழகம், கொரோனா, பாதிப்பு, மாவட்டங்கள், மதுரை, சென்னை, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn district

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 26) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 74,622 ஆயிரத்தை எட்டியது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 2 நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டியது மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் உச்ச அளவை எட்டியது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.


latest tamil news


இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,414 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மதுவிலக்கு காவல்துறை பிரிவில் 4 பெண் போலீஸ் உட்பட 5 போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் என 60 பேர் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், திருவள்ளூரில் 137 மதுரையில் 195 பேருக்கும், விருதுநகரில் 58 பேருக்கும். புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news



மதுரை

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். மதுரை அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே மதுரையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் மருத்துவமனை நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் இன்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X