பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை காவலர் உள்பட 12 பேருக்கு தொற்று

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் உள்பட, 12 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே, முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த, 49 வயது, 56 வயது ஆண்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மை காவலராக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, நேற்று, 'கொரோனா' தொற்று உறுதியானதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெத்தநாயக்கன்பாளையம், ஏழாவது வார்டைச் சேர்ந்த, 42 வயதுடையவர், கொலை வழக்கில் கைதானார். அவருக்கு தொற்று இருந்ததால், அவரது உறவினர்களுக்கு பரிசோதித்ததில், 61 வயது முதியவருக்கு தொற்று உறுதியானது.

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, 14வது வார்டு, சின்னமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, 28 வயது, 'ஏசி' மெக்கானிக் உள்பட மூவருக்கு, கடந்த, 22ல் தொற்று உறுதியானது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 35 பேருக்கு, நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மெக்கானிக்கின், 44 வயது தாய், 30 வயது அண்ணன், 30 வயது அத்தை, 15 வயது அத்தை மகள், 19 வயது உறவினர் பெண்ணுக்கு தொற்று உறுதியானது. அத்துடன், பக்கத்து வீட்டிலுள்ள, 47 வயது பெண், மற்றொரு பக்கத்து வீட்டிலுள்ள, 37 வயது தாய், அவரது, 20, 18 வயது மகன்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு, நேற்று மட்டும், ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X