பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பூர் தனிமை மையத்தில் கலெக்டர், கமிஷனர் ஆய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஓமலூர்: கருப்பூர் தனிமை மையத்தில், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தனர். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து, சேலம் வருவோர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமை மையத்தில், சில நாள் தங்க வைக்கப்பட்டு கண்காணித்து, வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது, 51 பேர் உள்ளனர். அறிகுறி இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, பெரியார் பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை, கலெக்டர் ராமன், மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று பார்வையிட்டனர். தனிமை மையத்தில் உள்ளவர்களின் பட்டியல், வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வந்தவர்களின் பட்டியலை பார்த்தனர். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு குறித்து, ஓமலூர் மருத்துவ அலுவலர் ரமணனிடம் கேட்டறிந்தனர். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், ஓமலூர் பி.டி.ஓ., முருகன், தாசில்தார் கணேஷ்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X