பொது செய்தி

தமிழ்நாடு

பொரி வியாபாரி இடமாற்றம்: சிறப்பு வார்டில் 14 பேர் அனுமதி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மேட்டூர்: தொற்றால் பாதிக்கப்பட்ட பொரி வியாபாரி, அவரது மனைவி, சேலம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டனர். மேட்டூரில், 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கூலிலைனில் வசிக்கும், 52 வயது பொரி வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கடந்த, 23ல், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 24ல், அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது, 45 வயது மனைவி, 54 வயது சகோதரி, 17 வயது மகள், 14 வயது மகன், அருகில் வசிக்கும், 38 வயது ஆண் உறவினர், 70 வயது பெண் உறவினர், 12 வயது சிறுவன் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் ஏழு பேரும், மேட்டூர் அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில், மற்றவருக்கு பரவியுள்ளதா என, இரு நாளாக மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். 24ல், 40 பேர், நேற்று முன்தினம், பொரி வியாபாரியின் உறவினர்கள், நண்பர்கள், 32 பேர், அப்பகுதிக்கு வந்த எட்டு பேர், மேட்டூர் போலீசார், 10 பேர் என, 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், அனைவருக்கும் தொற்று இல்லை என தெரிந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொரி வியாபாரி, மனதளவில் பாதிக்கப்பட்டதால், அவர், அவரது மனைவி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, மேட்டூர் அரசு மருத்துவமனையில், இடைப்பாடி அருகே குரும்பப்பட்டி தம்பதி, சங்ககிரி புதுமண தம்பதி, மேச்சேரி அடுத்த வெள்ளாற்றைச் சேர்ந்த இரு வாலிபர்கள், மேட்டூரைச் சேர்ந்த, 8 பேர் உள்பட, தொற்றால் பாதிக்கப்பட்ட, 14 பேர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X