போலீஸ் மீது கொலை வழக்கு: மா.கம்யூ., போர்க்கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மீது கொலை வழக்கு: மா.கம்யூ., போர்க்கொடி

Added : ஜூன் 27, 2020
Share

சேலம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரிகள் இருவர், போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறி, மா.கம்யூ., சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அதில், போலீசாரை கண்டித்தும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், பலர் முழக்கமிட்டனர். பின், ராமமூர்த்தி கூறியதாவது: போலீசார் தாக்கியதில், தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர். அவர்களை, நீதிமன்றம், ஏன் சிகிச்சைக்கு அனுப்பவில்லை. அதனால், சிறைக்கு சென்றதும், இருவரும் இறந்துவிட்டனர். இதற்கு முன், தமிழகத்தில், இப்படி ஒரு கொலை நடந்ததில்லை. இது, கொடுமையான மரணம். அதனால், போலீசார் மீது, கொலை வழக்கு பதிந்து, கடும் நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X