உ.பி.,யில் இருந்து வந்தவருக்கு வைரஸ்: மாதேஸ்வரன் கோவில் கரடு பகுதிக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உ.பி.,யில் இருந்து வந்தவருக்கு 'வைரஸ்': மாதேஸ்வரன் கோவில் கரடு பகுதிக்கு தடை

Added : ஜூன் 27, 2020
Share
வீரபாண்டி: உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த முதியவருக்கு வைரஸ் தொற்றுஉறுதியானதால், அவர் வசித்த, மாதேஸ்வரன் கோவில் கரடு, தடை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோவில் கரட்டைச் சேர்ந்தவர் மணி, 70. கடந்த பிப்ரவரியில், உத்தரபிரதேசத்தில் உள்ள பேத்தி வீட்டுக்கு சென்றார். மூன்று நாளுக்கு முன், சிறப்பு ரயிலில், ஓசூர் வந்தார். பின், மேட்டூரில் உள்ள நண்பர்

வீரபாண்டி: உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த முதியவருக்கு வைரஸ் தொற்றுஉறுதியானதால், அவர் வசித்த, மாதேஸ்வரன் கோவில் கரடு, தடை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோவில் கரட்டைச் சேர்ந்தவர் மணி, 70. கடந்த பிப்ரவரியில், உத்தரபிரதேசத்தில் உள்ள பேத்தி வீட்டுக்கு சென்றார். மூன்று நாளுக்கு முன், சிறப்பு ரயிலில், ஓசூர் வந்தார். பின், மேட்டூரில் உள்ள நண்பர் மூலம், இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம், ஆட்டையாம்பட்டி வந்தார். வீட்டில் உள்ளவர்கள், அவரை தனி அறையில் தங்க வைத்து, சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களின் பரிசோதனையில், அவருக்கு, தொற்று உறுதியானதால், அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் நான்கு பேரை அழைத்துச்சென்று தனிமைப்படுத்தினர். மாதேஸ்வரன் கோவில் கரட்டில் உள்ள, 70 வீடுகளில், பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து, அங்கு வசிக்கும், 355 பேருக்கு பரிசோதனை செய்தனர். ஆட்டையாம்பட்டி பேரூராட்சியினர், அப்பகுதிக்குள் வெளிநபர்கள் செல்ல முடியாதபடி தடுப்பு ஏற்படுத்தி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X