பசிபிக் கடல் தீவில் சீனா ஆதிக்கம்; அமெரிக்காவுக்குப் போட்டி?

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
China, Pacific Island, Embassy, Tiny, Pandemic, us, சீனா, பசிபிக், தீவு, தூதரகம், அமெரிக்கா

வாஷிங்டன்: பசிபிக் கடற்பகுதியில் உள்ளது கிரிபாட்டி தீவுத்தொடர். ஆசிய நாடுகளையும் அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய தீவுத் தொடராக இது விளங்குவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கட்டுபாட்டில் கிரிபாட்டி தீவுகள் உள்ளன. அமெரிக்காவின் ராணுவப் படைகள் கிரிபாட்டி தீவுகளில் பயிற்சி எடுத்துவந்தன.

ராணுவப் பயிற்சிக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இந்த தீவுத் தொடரை கருதியது. இந்தத் தீவின் வளர்ச்சியில் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகித்து வந்தது. இதற்காக அதிக நிதி ஒதுக்கியது. கிரிபாட்டி தீவுகள் மீது சீனாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது சீனா இந்த தீவு தொடரில் தனது தூதரகத்தை நிறுவியுள்ளது. இந்தத் தீவின் நிர்வாகத்தில் ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கும் பங்குண்டு.


latest tamil news


ஒரு லட்சத்து 16 ஆயிரம் மக்கள் வாழும் இந்த குட்டித் தீவில் அமெரிக்காவுக்கு போட்டியாக தனது ஆதிக்கத்தை செலுத்த முன்வந்துள்ளது சீனா. 2006ம் ஆண்டு சீன உயர் அதிகாரி ஜியாபோ இந்த தீவுக்கு வருகை தந்தார். இந்த தீவை கண்டு ஆச்சரியமடைந்த அவர் இந்த தீவின் வளர்ச்சிக்கு 424 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த தீவில் விவசாயம், மீன்பிடித் தொழில் மற்றும் இதர தொழில்களின் முன்னேற்றத்திற்கு சீனாவின் இந்த நிதி பயன்படும்.

ஆஸ்திரேலியாவை அடுத்து சீனா தான் இந்த தீவின் வளர்ச்சிக்கு அதிக நிதி கொடுத்துள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கிரிபாட்டி தீவுத்தொடர் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அடையும். பிரபல சுற்றுலாத் தலமாகவும் மாற வாய்ப்புள்ளது என சீனா கணிக்கிறது. பசிபிக் கடற்பரப்பில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த இந்த தீவை பயன்படுத்திக்கொள்கிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
27-ஜூன்-202021:36:09 IST Report Abuse
l vijayaraghavan சப்பை மூக்கன் செய்வதை எல்லாம் பார்த்தால் உலகத்தை அழிக்காமல் ஓய மாட்டன் போல் தான் உள்ளது.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202019:06:03 IST Report Abuse
Sriram V China is playing with money. World needs to ensure that no more China is earning dollars, plug their money earning ability
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
27-ஜூன்-202018:45:47 IST Report Abuse
Anand சீனா எங்கு கால் வைக்கிறதோ அந்த இடம் விளங்காமல் போய் விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X