பொது செய்தி

தமிழ்நாடு

'மருந்தகம் மூடலால் ரூ.15 கோடி வருவாய் இழப்பு'

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேலம்: ''தமிழகத்தில், நான்கு மணி நேரம் மருந்து கடைகள் மூடலால், 15 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது,'' என, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க மாநில பொதுச்செயலர் செல்வம் கூறினார்.
இதுகுறித்து, அவர், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சாத்தான்குளத்தில் இருவர் இறந்த சம்பவத்தில், போலீசின் அத்துமீறலை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ள கடை அடைப்பு போராட்டத்துக்கு, மருந்து வணிகர் சங்கம் முழு ஆதரவு அளித்தது. இதனால், இன்று(நேற்று) காலை, 7:00 முதல், 11:00 மணி வரை, தமிழகம் முழுதும் உள்ள, 39 ஆயிரத்து, 190 மருந்து கடைகள் மூடப்பட்டதால், 15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில், 1,400 மருந்தகங்கள் அடைக்கப்பட்டன. மக்களின் உயிர்காக்கும் பணியில் மருந்து வணிகர்கள் ஈடுபடுவதால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேறு வழியின்றியே கடைகள் மூடப்பட்டன. இனியாவது, மருந்து கடைகள் மட்டுமின்றி, மக்களின் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு போலீசாரால் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X