பொது செய்தி

தமிழ்நாடு

விளைச்சல் பாதிப்பால் 15 நாளில் தக்காளி விலை 2 மடங்கு உயர்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேலம்: தக்காளி விளைச்சல் பாதிப்பு, அண்டை மாநில வரத்து சரிவால், 15 நாளில், இரு மடங்கு விலை உயர்ந்தது.
தமிழகத்தில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவில் தக்காளி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அந்த மாவட்டங்களில், பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளியும் முற்றிலும் நின்றுவிட்டது. காய்கறி மார்க்கெட்டுகளான சேலம் - தலைவாசல், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், மதுரை - மாட்டுத்தாவணி, நாகர்கோவில் - வடசேரி, தமிழகம் முழுதுமுள்ள, 179 உழவர்சந்தைக்கு, கடந்த மாதம் வரை, தினமும், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளி, தற்போது, 30 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த, 11ல், உழவர்சந்தையில் நாட்டு தக்காளி முதல் ரகம் கிலோ, 20க்கு விற்றது, நேற்று, 38 ரூபாய், இரண்டாம் ரகம், 18க்கு விற்றது, 34 ரூபாயாக உயர்ந்தது. கிராஸ் தக்காளி முதல் ரகம், 18க்கு விற்றது, 36 ரூபாய், இரண்டாம் ரகம், 16க்கு விற்றது, 32 ரூபாயாக உயர்ந்தது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம், 25க்கு விற்றது, 48 முதல், 50 ரூபாய், இரண்டாம் ரகம், 22க்கு விற்றது, 40 முதல், 45 ரூபாய் வரை விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X