பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடுக்கு அழைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குனர் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 2020 - 21ம் ஆண்டுக்கு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், காரீப் பருவ பயிர்களான உளுந்து, நிலக்கடலை பயிருக்கு ஜூலை, 31 வரை; சோளம் பயிருக்கு, ஆக., 16 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், பயிர்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம், பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டு அடங்கலை வி.ஏ.ஓ.,விடம் பெற்று, அதனுடன் வங்கி புத்தகம், ஆதார் கார்டு நகலுடன், கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி, பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விபரம் பெற, 94439 13530, 98943 67761, 99650 68271 என்ற மொபைல் எண்களில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X