பொது செய்தி

தமிழ்நாடு

தம்பதி, கார் நிறுவன ஊழியருக்கு தொற்று

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூர் அருகே, காமலாபுரம், கிழக்கத்திகாட்டைச் சேர்ந்த, 28 வயதுடையவர், சேலம், நெத்திமேட்டில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று, அவருக்கு தொற்று உறுதியானது. இதனால், அவர் வசித்த வீட்டை சுற்றி, 50க்கும் மேற்பட்ட வீடுகளில், சுகாதாரத்துறையினர், கிருமிநாசினி தெளித்தனர். அதேபோல், காடையாம்பட்டி, குண்டுக்கல் அருகே, சிகலப்பட்டியைச் சேர்ந்த, 48, 37 வயது தம்பதியர், காஞ்சிபுரம் சென்று வந்தனர். அவர்களுக்கும், தொற்று உறுதியானதால், அவர்கள் வசித்த வீடுகளை சுற்றி, சுகாதாரத்துறையினர், கிருமிநாசனி தெளித்து, கண்காணித்து வருகின்றனர்.
போலீசாருக்கு பரிசோதனை: ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த, எஸ்.எஸ்.ஐ.,க்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இதனால், உடன் பணிபுரிந்த, 34 போலீசாருக்கு, நேற்று, கருப்பூர் மையத்தில், சளி மாதிரி எடுத்துக்கொண்டனர். முன்னதாக, சேலம் விமான நிலையத்தில், 'ட்ரூஜெட்' விமான நிறுவன ஊழியர், 17 பேருக்கு நடந்த பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X