சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிறந்து 6 நாளில் குழந்தை மர்மச்சாவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், பிறந்து ஆறு நாளே ஆன குழந்தை மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சேலம், அம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்தவர் வரதராஜ், 25. பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 22. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணமானது. ஐஸ்வர்யாவுக்கு, கடந்த, 21ல், மூன்று ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதில், குழந்தை, தாயை, யார் வீட்டுக்கு அழைத்துச்செல்வது என்பதில், வரதராஜ், ஐஸ்வர்யாவின் பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ஐஸ்வர்யாவின் தந்தை வீட்டுக்கு, தாயும், குழந்தையும் சென்றனர். இரவு, பால் குடித்த குழந்தை, தொட்டிலில் படுத்து தூங்கிய நிலையில், நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட, மீண்டும், அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், தன் குழந்தையின் வாயில், மாமியார் சரோஜா கைவிட்டு சளியை அகற்றியதால் தான் குழந்தை இறந்தது என குற்றம் சாட்டினார். இதுகுறித்து, வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இன்று, குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்தபின், இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X