விதி மீறிய வாகனங்களுக்கு வருவாய்துறையினர் அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறிய வாகனங்களுக்கு வருவாய்துறையினர் அபராதம்

Added : ஜூன் 27, 2020
Share

தர்மபுரி: தர்மபுரியில், விதி மீறி இயக்கப்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு, வருவாய் துறையினர் அபராதம் விதித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வினால், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல், அதிகரித்தது. இதை தடுக்க, தளர்வுகள் விலக்கப்பட்டு, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில், தனி தாசில்தார் ராஜசேகரன் தலைமையில், குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இதில், போலீஸ் எஸ்.ஐ., ராஜகோபால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் நகராட்சி ஊழியர்கள், இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை திருப்பத்தூர் சாலையில் சோதனை நடத்தினர். இதில், அதிகளவில் ஆட்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட எட்டு வாகனங்களுக்கு, தலா, 500 வீதம், 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல், டூவீலரில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், 92 பேருக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X