பொது செய்தி

தமிழ்நாடு

செடி நாற்று இருப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

தர்மபுரி: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், செடி நாற்று இருப்பு உள்ளதால், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 6.75 ஏக்கரில், செடி நாற்று பண்ணை அமைத்து செயல்பட்டு வருகிறது. இங்கு, தரமான வீரிய ரக தக்காளி மற்றும் கத்தரி நாற்றுகள், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்து, ஒருநாற்று ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை, விவசாயிகளுக்கு நேரடியாகவும், மானிய திட்டத்தின் மூலமாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பண்ணையில் தற்போது மா, பக்க ஒட்டு மற்றும் குருத்து ஒட்டுச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், நுண்ணுயிர் பூஞ்சான கொல்லியான டிரைக்கொடெர்மா மற்றும் சூடோமோனாஸ் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மொரப்பூர் தோட்டக்கலை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு, செடி நாற்றுகள் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94424 83102, 97862 01009 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X