போதிய மருந்து, மாத்திரைகள் மருத்துவமனைகளில் இருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'போதிய மருந்து, மாத்திரைகள் மருத்துவமனைகளில் இருப்பு'

Added : ஜூன் 27, 2020
Share

தர்மபுரி: 'தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனை களில், கொரோனா சிகிச்சைக்கு போதிய அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது,'' என, அரசு முதன்மை செயலரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு பேசினார்.
இது குறித்து, தர்மபுரியில் நடந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா சிகிச்சை பெறுவோர் மற்றும் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு, தரமான சிகிச்சை மற்றும் சத்தான உணவுகள் முறையாக வழங்க வேண்டும். வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 12 ஆயிரத்து, 518 பேருக்கு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை, 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில், போதியளவில் மருந்து, மாத்திரை, வென்டிலேட்டர், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவை அதிகளவில் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கலெக்டர் மலர்விழி, எஸ்.பி., ராஜன், அரூர் சப்- கலெக்டர் பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


* அரூரில், தர்மபுரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்தோஷ் பாபு நேற்று மதியம், 1:40 மணிக்கு, அரூர் திரு.வி.க., நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன், கலெக்டர் மலர்விழி, எஸ்.பி., ராஜன், சப்-கலெக்டர் பிரதாப், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் உடன் வந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X