பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் பகுதியில், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் இறுதி வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 200 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பின், விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கூடை தக்காளி, 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வறட்சியால், தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. மேலும், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளால், தக்காளியின் தேவை அதிகரித்துள்ளது. இதுவும், விலை உயர்வுக்கு காரணமாகும். தக்காளி விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X