பொது செய்தி

தமிழ்நாடு

தானியங்களை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: விதைப்பண்ணை திட்டத்தில் விளைவிக்கப்பட்ட தானியங்களை, கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வேப்பனஹள்ளி பகுதியில், விவசாயிகளுக்கு விதைப்பண்ணை திட்டத்தில், நெல், ராகி, கொள்ளு, துவரை போன்றவற்றின் விதைகளை வழங்கி பயிர் செய்வித்து அவற்றை அறுவடை முடிந்த பின், வேளாண் துறை மூலம், கொள்முதல் செய்வது வழக்கம். இத்திட்டத்தில், வேப்பனஹள்ளி பகுதியில், ஏராளமான விவசாயிகளுக்கு, நெல், ராகி, கொள்ளு, துவரை போன்றவற்றின் விதைகள் வழங்கப்பட்டன. இவற்றை விவசாயிகளும், பயிர் செய்து, நல்ல முறையில் விளைவித்த பின், அறுவடை செய்து, வேளாண் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தொடர்பான அலுவலர் ஒருவர், நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் உள்ளதால், அறுவடை செய்த விதைப்பயிர்கள் கடந்த ஆறு மாதங்களாக கொள்முதல் செய்யப்படாமல், வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதைப்பயிர்களை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X