பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: 'தினமலர்' செய்தி எதிரோலியாக, மாவட்ட எல்லையில் கலெக்டர் பிரபாகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மண்டலங்களுக்குள் இயக்கப்பட்டு வந்த, அரசு பஸ்களை நேற்று முன்தினம் முதல், மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்கவும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் அனைத்தும், 'சீல்' வைக்கப்பட்டு, இ-பாஸ் இன்றி வரும் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில், போலீஸ் தணிக்கையின்றி வாகனங்கள் சென்று வந்தன. இது குறித்து, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர், ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., சரவணன் ஆகியோர் மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டிக்கு நேற்று நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களின் விபரங்களை ஆய்வு செய்ததோடு, வாகனங்களின் வருகை குறித்து, பதிவேட்டில் பதிவு செய்த பின்னர், அனுப்பி வைக்க வேண்டும். இ-பாஸ் இன்றி வரக்கூடிய வாகனங்களை, மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது. மாநிலங்களுக்கிடையே, ஏழு சோதனைச்சாவடிகள், மாவட்டங்களுக்கான, 15 சோதனைச்சாவடிகள் என மொத்தம், 22 சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X