பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி ஒன்றியத்திலுள்ள 124 அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியத்திலுள்ள, 124 அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என, கல்வித்துறை இன்னும் முடிவெடுக்கவில்லை. பல தனியார் பள்ளிகளில், இணைய தளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்பும் பணிகள், தற்போது சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 124 அரசு மற்றும் அரசு நிதி உதவிப் பள்ளிகளில் படிக்கும், 12 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்களை, பாதுகாப்பாக பள்ளிகளுக்கு கொண்டு சென்று, ஒப்படைக்கும் பணி துவங்கியது. நேற்று, கொத்தபேட்டா மற்றும் துறிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு, புத்தகங்கள் வழங்கப்படுவதை, வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேதா மற்றும் மரியரோஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X