தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை

Added : ஜூன் 27, 2020
Share

வேலூர்: வேலூர், மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில், 939 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் வேலூர், குடியாத்தத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அவர்கள் குடும்பத்தினர், 3,000 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். ஆனால், காட்பாடி அருகே, பள்ளிக்குப்பத்தில், பொது இடத்துக்கு மக்களை வரவழைத்து, சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால், தனிமைப்படுத்தி உள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தவறினால், சுகாதாரத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, காட்பாடி தாசில்தார் பாலமுருகன் எச்சரித்தார். அதன் பின் தற்போது, சுகாதாரத் துறையினர், வீடுதோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X