சூதாடிய தலைமையாசிரியர் உள்பட ஒன்பது பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடிய தலைமையாசிரியர் உள்பட ஒன்பது பேர் கைது

Added : ஜூன் 27, 2020
Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே, சூதாடிய பள்ளி தலைமையாசிரியர் உள்பட, ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் போலீசார், நேற்று கோவிந்தாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரெட்டி தோப்பை சேர்ந்த பழனி, 25, செல்வகுமார், 30, ரபீக் அகமது, 32, பாலாஜி, 35, ஆசிப், 40, கலையரசன், 39, குப்புசாமி, 36, தேவலாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பூவராகவன், 40, பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்த ஜீவரத்தினம், 35, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 84 ஆயிரம் ரூபாய், ஆறு பைக், 10 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள், திருப்பத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X