பொது செய்தி

தமிழ்நாடு

3 போலீசாருக்கு கொரோனா: ஆரணி ஸ்டேஷன் மூடல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஆரணி: ஆரணியில், மூன்று போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று மேலும், 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்டத்தில், 1,492 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், 36 வயது போலீஸ்காரர், 32 வயது டிராபிக் போலீஸ் மற்றும் 52 வயது தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷன் நேற்று மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடன் பணிபுரியும் போலீசார் அனைவருக்கும், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதேபோன்று, திருவண்ணாமலையில் பணிபுரியும் டிராபிக் போலீஸ்காரர் ஒருவருக்கு, நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X