கரூரில் திறந்திருந்த கடைகள்: சகஜ நிலைக்கு பாதிப்பில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் திறந்திருந்த கடைகள்: சகஜ நிலைக்கு பாதிப்பில்லை

Added : ஜூன் 27, 2020
Share

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும், மொபைல் போன் கடை வைத்திருந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்திருந்ததாக கூறி, போலீசார் இருவரையும் கைது செய்தனர்; கோவில்பட்டி கிளை சிறையில் அவர்கள் உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில்தான் இருவரும் உயிரிழந்ததாக கூறி, நேற்று, மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, நேற்று காலை கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட்டில், கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், ஜவஹர் பஜார், கோவை சாலை, தின்னப்பா கார்னர் சாலை, திருச்சி சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. சில ஓட்டல்கள், கடைகள் மட்டும் மூடப்பட்டிருந்தன. இதனால், கரூரில் சகஜ நிலைக்கு பாதிப்பில்லை. அதேபோல், க.பரமத்தி, தென்னிலை, நொய்யல், வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம், வாங்கல், வெள்ளியணை பகுதிகளில், பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X