மோடி பலவீனமான பிரதமர்: எம்.பி., ஜோதிமணி குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோடி பலவீனமான பிரதமர்: எம்.பி., ஜோதிமணி குற்றச்சாட்டு

Added : ஜூன் 27, 2020
Share

கரூர்: ''சீனாவை எதிர்கொள்ள வேண்டிய, பிரதமர் நரேந்திர மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார். இந்தியாவுடன், நட்புடன் இருந்த நேபாளமும், நம் பகுதிகளை இணைத்து, பாராளுமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர். இதன் மூலம், நரேந்திர மோடி பலவீனமான பிரதமராக உள்ளார்,'' என, காங்., - எம்.பி., ஜோதிமணி குற்றம்சாட்டினார்.
சீனா தாக்குதலில் உயிரிழந்த, 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு, கரூர், லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன் அமர்ந்து, காங்., கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். அதில் பங்கேற்ற எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: உலகில் நான்காவது நிலையில் உள்ள, இந்திய ராணுவத்தை காங்., கட்சி சார்பில் பிரதமர்களாக இருந்த, நேரு முதல், மன்மோகன் சிங் வரை, வலிமையாக கட்டமைத்துள்ளனர். ஆனால், இந்திய, சீனா எல்லை பகுதியில் நம், 20 ராணுவ வீரர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய பகுதிகளை, சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், சீனாவை எதிர்கொள்ள வேண்டிய, பிரதமர் நரேந்திர மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார். இந்தியாவுடன், நட்புடன் இருந்த நேபாளமும், நம் பகுதிகளை இணைத்து, பாராளுமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர். இதன் மூலம், நரேந்திர மோடி பலவீனமான பிரதமராக உள்ளார். இந்திய பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்கிறார் பிரதமர். அப்படியானால், 20 பேர் கொலை செய்யப்பட்டது எப்படி. இனிமேலாவது எதிரிகளை ஒடுக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X