இளம்பெண் மீட்பு: உறவினரிடம் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மீட்பு: உறவினரிடம் ஒப்படைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
கரூர்: தேனியில் இருந்து கரூருக்கு வழி தவறி வந்த இளம்பெண்ணை, மகளிர் போலீசார் மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.தேனி மாவட்டம், காளியம்மன் கோவில் அழகாபுரி காலனி பகுதியை சேர்ந்த, சென்ட்ராயன் மகள் சுதா, 20; இவர் நேற்று முன்தினம் இரவு, கரூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிக்கொண்டிருந்தார். இதுகுறித்து, பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.

கரூர்: தேனியில் இருந்து கரூருக்கு வழி தவறி வந்த இளம்பெண்ணை, மகளிர் போலீசார் மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம், காளியம்மன் கோவில் அழகாபுரி காலனி பகுதியை சேர்ந்த, சென்ட்ராயன் மகள் சுதா, 20; இவர் நேற்று முன்தினம் இரவு, கரூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிக்கொண்டிருந்தார். இதுகுறித்து, பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மகளிர் போலீசார் சுதாவை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு எஸ்.ஐ., சத்திய பிரியா விசாரணை செய்த போது, பெற்றோர் இறந்து விட்டதால், திருப்பூரில் வேலை செய்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத காரணத்தால், திருப்பூரில் இருந்து, தேனி செல்லும் வழியில், வழி தவறி கரூர் வந்து விட்டதாக, சுதா தெரிவித்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார், தேனி மாவட்டம் அல்லி நகரம் போலீசாரிடம் விசாரித்த போது, சுதா கூறியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, கரூர் மகளிர் ஸ்டேஷன் போலீஸ் சையது அம்மாள், சுதாவை அழைத்து சென்று தேனியில் உள்ள, அவரது தாத்தா மாரியப்பனிடம் ஒப்படைத்து விட்டு, கரூர் திரும்பினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X