பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் முருகன் கோவிலில் ஆனி சஷ்டி விழா அலங்காரம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஆனி சஷ்டியை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலலில் உள்ள நிலையில் நேற்று, நாமக்கல் பகுதி முருகன் கோவில்களில் பக்தர்கள் யாரும் இல்லாமல், ஆனி மாத சஷ்டி விழா நிகழ்ச்சியில் சுவாமிக்கு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது.


* நாமக்கல்-மோகனூர் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு ராஜஅலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாார்.


* நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.


* கூலிப்பட்டி கந்தகிரி மலைக்கோவில் பழனியாண்டவருக்கு, வெள்ளி கவசத்துடன் திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது.


* மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி அபி?ஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, 10:00 மணிக்குள் நடை அடைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X