பிரதமர் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 27, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2020-21ம் ஆண்டு, காரிப் பருவத்தில், நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, ராகி மற்றும் தானிய சோளப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம். நெல் பயிருக்கு, பிரிமியத் தொகையாக, ஏக்கருக்கு, 640.36, உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கு, 256.20, கத்தரி பயிருக்கு, 1,324, தக்காளிக்கு, 909, மஞ்சளுக்கு, 3,641 ரூபாய் செலுத்த வேண்டும். கடைசி நாள், ஜூலை, 31. மக்காச்சோளப் பயிருக்கு, 302, துவரைக்கு, 256.20, நிலக்கடலைக்கு, 381, பருத்திக்கு, 507.55, ராகிக்கு, 177, தானிய சோளப் பயிருக்கு, 159 ரூபாய் கட்ட வேண்டும். கடைசி நாள், ஆக., 16. மரவள்ளிக்கு, 2,075, வாழைக்கு, 3,191 ரூபாய். இப்பயிருக்கு, ஆக., 31 கடைசி நாள். கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு, வேளாண் இணை இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X