வணிகர்கள் கடையடைப்பு: மாவட்டம் முழுவதும் வெறிச்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்கள் கடையடைப்பு: மாவட்டம் முழுவதும் 'வெறிச்'

Added : ஜூன் 27, 2020
Share

நாமக்கல்: வணிகர்கள் கடையடைப்பால் மாவட்டம் மழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கிளைச் சிறையில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் செய்தனர். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது, இரட்டை கொலை வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். வணிகர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வணிகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன. மருந்து வணிகர்களும், நான்கு மணி நேரம் கடைகளை மூடி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், மாலை, 5:00 மணியளவில் தங்களுடைய வீடுகளில் தீபம் ஏற்றி வணிகர்களும், அவர்களது குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர். முழு கடையடைப்பால் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் நகரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X