பொது செய்தி

தமிழ்நாடு

'சீல்' வைக்கப்பட்ட பகுதியில் காய்கறி விற்க ஏற்பாடு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: கொரோனா தொற்றால், 'சீல்' வைக்கப்பட்ட ஆண்டிக்காடு பகுதியில், நகராட்சி மூலம் காய்கறி கடை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, ஆண்டிக்காடு பகுதியில், 24 வயதுடைய பெண் கடந்த, 10 நாட்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு திரும்பினார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பின், அவர் வசித்த வந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு, அப்பகுதி முழுவதும், 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், சுகாதார பணிகளும் நடந்தன. நகராட்சி மூலம் அவர்களுக்கு தேவையான காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில், கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், எந்தவித சிரமமின்றி அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X