பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி கவர்னர் கலந்துரையாடல்: நாமக்கல் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: புதுச்சேரி மாநிலத்தின், துணைநிலை கவர்னர் கிரண்பேடி, கடந்த, 23ல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அதில், மாணவர்களின் அரசியல் பங்கேற்பு, சிறந்த சமூக செயற்பாட்டாளர்களாக சேவை மனப்பான்மையோடு இருக்க வேண்டியதன் அவசியம், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு உடனடியாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது, பள்ளிப் பருவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் விவசாயத்தை நம் வாழ்வின் ஒரு பகுதியாக உருவாக்கிக் கொள்வது குறித்து கலந்துரையாடினார். புத்தகங்களின் வழியாக புதியனவற்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்தார். இந்நிகழ்ச்சியில், 25 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து, டாக்டர் எம்.எஸ். உதய மூர்த்தி பள்ளி சார்பாக, கணேஷ் ஆதித்யா, முகில்மதி, சிபி கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், பள்ளிக்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X