பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவு ஆய்வாளர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: சென்னையில் இருந்து, நாமக்கல் மாவட்டத்துக்கு வந்தவர்களை, பரிசோதனை செய்ததில், ஆறு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், ஏப்., 1 முதல், இதுவரை, 91 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லாரி டிரைவர் இறந்தார். இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இருந்து, நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் வந்த, 28 வயது ஆண், அத்தனூரை சேர்ந்த, 75 வயது முதியவர், 39 வயது ஆண், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த, 57 வயது ஆண், அலங்காநத்தத்தை சேர்ந்த, 20 வயது ஆண், 47 வயது ஆண் என, மொத்தம், ஆறு பேர் நாமக்கல் மாவட்டம் வந்தனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், நாமக்கல் நகராட்சியில், துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர், செங்கல்பட்டுக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X