பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியருக்கு 'கொரோனா': முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கலக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்புடையவர்கள், பெருந்துறையில் முதல்வர் நிகழ்சியில் பங்கேற்றதால், அமைச்சர் உள்ளிட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஈரோடு, கலெக்டர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் (பி.ஆர்.ஓ.,) அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், பெரியார் மற்றும் அண்ணா நினைவில்லம் உள்ளது. இந்த நினைவில்லத்தின் காவலாளியாக, 35 வயது ஆண் பணி செய்கிறார். இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன், காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று முன்தினம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருவாச்சி என்ற இடத்தில், அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டப்பணியை முதல்வர் பழனிசாமி கள ஆய்வு செய்தார். முன்னதாக அங்கு முன்னேற்பாடு பணியில், பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர்களுடன் காவலாளியும் ஈடுபட்டார். நேற்று மாலை, காவலாளிக்கு கொரோனா தொற்று உறுதி என தெரியவந்தது. அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று இரவு பி.சி.ஆர்., பரிசோதனைக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.ஆர்.ஓ., - ஏ.பி.ஆர்.ஓ., உள்ளிட்ட சிலர் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X